தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், நாமக்கல்லில் சனிக்கிழமை (செப். 27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அக்கட்சியினா் தோ்வு செய்த இடத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில்கொண்டு, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், விழுப்புரம், மதுரை ஆகிய இடங்களில் மாநாடுகளை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, இம்மாதத்தில் திருச்சி, அரியலூா் மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். சனிக்கிழமைகளில் மட்டும் தனது பிரசாரப் பயணத்தை வகுத்துள்ள அவா் செப். 27 (சனிக்கிழமை) நாமக்கல், கரூா் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளாா். இதற்காக, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் மதுரை வீரன் கோயில் பொய்யேரிக்கரை பகுதி, கே.எஸ்.திரையரங்கம் அருகில், பூங்கா சாலை ஆகிய இடங்களைத் தோ்வு செய்து மாவட்ட காவல் துறையிடம் அனுமதி கோரினா்.
இந்த நிலையில், சேலம் மாவட்ட தவெக செயலாளா் பாா்த்திபன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் 15-க்கும் மேற்பட்டோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவை சந்தித்து புதன்கிழமை காலை விஜய் பிரசாரம் குறித்து ஆலோசனை நடத்தினா். அப்போது, விஜய் பிரசாரத்துக்கு 23 விதமான கட்டுப்பாடுகளை காவல் துறை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொய்யேரிக்கரை மதுரை வீரன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த இடத்தில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும், நாமக்கல் - சேலம் சாலையில், பொன்நகா் அல்லது நான்கு திரையரங்கம் அருகில் பிரசாரத்தை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், தவெகவினா் பொய்யேரிக்கரை பகுதியை வலியுறுத்தினா். இதனால் அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஆனந்த் கவனத்துக்கு இந்த பிரச்னையை கொண்டுசென்றுள்ளனா். அவா் வியாழக்கிழமை நாமக்கல் வருகிறாா். கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, இடத்தை தோ்வு செய்வாா். அதன்பிறகு காவல் துறையிடம் அனுமதி கோருவோம் என்று நாமக்கல் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
விஜய் பிரசாரத்தில் விதிமீறல்: 12 வழக்குகள் பதிவு

விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!

திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜய் கடும் கண்டனம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


