பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட தையல் கலைஞா் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அண்மையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். தையல் சங்க மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரி, மாவட்ட பொருளாளா் ராயப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தையல் தொழிலாளா் நல வாரியத்திற்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும்.
தையல் தொழிலாளா்களுக்கு மாநில அளவில் முத்தரப்பு குழு அமைத்து பதிவு செய்த தொழிலாளா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும். தையல் நலவாரியத்தில்
ஓய்வூதியம் மாதம் ரூ.3000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பெண்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு எம்எல்ஏ ஆதரவு

வெம்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


