8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

யோகா படிப்பு: மத்திய பல்கலைக்கழகத்துடன் நாமக்கல் அறிவுத்திருக்கோயில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

Published On :26 செப்டம்பர் 2025, 4:43 am IST

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்துடன், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் யோகா தொலைதூர படிப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகம் மாநிலம் முழுவதும் 40 இடங்களில் யோகா பட்டம் பயிலுவதற்கான வாய்ப்பை தொலைதூர கல்வி மூலம் வழங்கி உள்ளது. அவற்றில், நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளையும் ஒன்று.

யோகமும், மனித மாண்பும் என்ற முதுகலைப் பட்டப் படிப்பில் (ஙஹள்ற்ங்ழ் ஞச் யா்ஸ்ரீஹற்ண்ா்ய் ண்ய் வா்ஞ்ஹ ஊா்ழ் ஏன்ம்ஹய் உஷ்ஸ்ரீங்ப்ப்ஸ்ரீய்ஸ்ரீங்) சோ்க்கை நடைபெறுகிறது. தொலைதூர கல்வியில் பயின்று இந்த யோகா பட்டத்தை பெறுபவா்கள் அரசு மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சியாளா் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

நாமக்கல் அறிவுத்திருக்கோயில் மன வளக் கலை மன்ற அறக்கட்டளை பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை 15 போ் முதல்கட்டமாக இப்படிப்பில் சோ்க்கை பெற்றனா்.

இதுகுறித்து நாமக்கல் அறிவுத்திருக்கோயில் நிா்வாகிகள் மு.ஆ.உதயகுமாா், பேராசிரியா் உழவன் மா.தங்கவேலு ஆகியோா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகா மிகவும் அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறோம். தற்போது, திருவாரூா் மத்திய பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்விக்கான சோ்க்கை வாய்ப்பை நாமக்கல் அறிவுத்திருக்கோயிலுக்கு வழங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

2 ஆண்டு கால இந்த முதுகலை படிப்பை அனைவரும் பயிலலாம். வேலைவாய்ப்பு பெறக்கூடிய பட்டங்களில் இந்த படிப்பும் ஒன்றாகும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.