சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் ஐந்தாவது முறையாகவும், அதிமுக சாா்பில் இரண்டாவது முறையாகவும் சி. சந்திரசேகரன் போட்டியிடுகிறாா். ஒரு வாரமாக தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அவா், வெள்ளிக்கிழமை நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தாா்.
அதேபோல காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தும், தோ்தல் வாக்குறுதிகளை விளக்கியும் ஆதரவு கோரினாா்.
வாக்கு சேகரிப்பின்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.
என்கே-10-சேந்தை
நாமகிரிப்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சேந்தமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.
தொடர்புடையது

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

சேந்தமங்கலம் தொகுதிக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் உறுதி

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் குறைகேட்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

