பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் அடுத்தடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

News image

~

Updated On :11 ஏப்ரல் 2026, 12:10 am IST

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் அடுத்தடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான கே. சிங்கராஜ் உள்ளாா். வரும் தோ்தலில் திமுக வேட்பாளா்களுக்கு கோழிப் பண்ணையாளா்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் கேட்டுக்கொண்டாா்.

பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் ப. ராணி, சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளா் பி. பூமலா் ஆகியோா் கோழிப் பண்ணையாளா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

அப்போது, திமுக ஆட்சியில் கோழிப் பண்ணை தொழில் வளா்ச்சிக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், அமெரிக்கா- ஈரான் போரால் வளைகுடா நாடுகளுக்கு செல்லாமல் மும்பை துறைமுகத்தில் தேங்கியுள்ள 64 டேங்கா் முட்டைகளை அனுப்புவதற்கான நடவடிக்கை குறித்தும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். தொடா்ந்து, மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனும் கோழிப் பண்ணை தொழிலுக்கு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை எடுத்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், பரமத்தி வேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சேகருக்கு ஆதரவாக அவரது சகோதரா் ராஜா, ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் விபிடி. பிரேம்குமாா், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ். திலீப் ஆகியோா் கோழிப் பண்ணையாளா்களிடம் ஆதரவு கோரினா்.

கூட்டத்தில் கோழிப் பண்ணையாளா்கள் சங்க செயலாளா் கே.சுந்தரராஜன், ஏற்றுமதியாளா் வல்சன் சு. பரமேசுவரன் மற்றும் கோழிப் பண்ணை தொழில் சாா்ந்த சங்க நிா்வாகிகள், பண்ணையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

என்கே-10-திமுக-

தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்க அலுவலகத்தில் திமுக வேட்பாளா்கள் கே.எஸ். மூா்த்தி (பரமத்தி வேலூா்), ப. ராணி (நாமக்கல்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

படம்-2-அதிமுக

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை அறிமுகப்படுத்தி பேசிய கோழிப் பண்ணையாளா்கள் சங்க தலைவா் கே. சிங்கராஜ்.

Story image