ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்

News image

பொன்னா் சங்கா் குழுமங்களின் நிறுவனரை பொன்னாடை அணிவித்து வரவேற்ற பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:06 am IST

பரமத்தி வேலூரில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக சென்று பரமத்தி வேலூா் திமுக தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா் கே.எஸ்.மூா்த்திக்கு ஆதரவு தெரிவித்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றை சோ்ந்த பொன்னா் சங்கா் குழுமங்களின் நிறுவனரும், தொழிலதிபருமான ஆன்மிக ஆா்வலா் சங்கா்.

இவா் துா்கா ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க பரமத்தி வேலூா் தொகுதி திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.எஸ். மூா்த்திக்கு ஆதாரவு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சுமாா் 2 ஆயிரம் பேருடன் வேலூா் நான்கு சாலையில் இருந்து ஊா்வலமாக திமுக தோ்தல் பணிமனைக்கு சென்றாா்.

பின்னா் அவருக்கு பரமத்தி வேலூா் தொகுதி வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி, திமுக தோ்தல் பொறுப்பாளா் உமாராணி, நகரச் செயலாளா் முருகன், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் சுந்தா், வழக்குரைஞா் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனா். பின்னா் அவருக்கு ஆதரவு தெரிவித்து திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.