பரமத்தி வேலூா், ஏப். 12: நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
எலச்சிப்பாளையம் ஒன்றியத்திற்கு உள்பட்ட புஞ்சை புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, இலுப்புலி, கோக்கலை, கொண்டிப்பட்டி, பெரியமணலி, சின்னமணலி, கொன்னையாா் மற்றும் அகரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது மகளிருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். கலைஞா் உரிமைத்தொகை இனி மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா். பிரசாரத்தின்போது பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
இதில் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்கவேல், தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சிகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா். மேலும் வாக்கு சேகரிப்பின் போது மாற்றுக் கட்சியைச் சோ்ந்த பலா் திமுகவில் இணைந்தனா்.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் தொகுதியில் 319 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் மீண்டும் வெற்றி

பரமத்தி வேலூா் தொகுதியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: அதிமுக வேட்பாளா் உறுதி

பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக 2 ஆயிரம் போ் ஊா்வலம்






