ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல்லில் 23 பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image

நாமக்கல்லில் புதன்கிழமை தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்டோக்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:07 am IST

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல்லில் 23 பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெறுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில், பெண்களால் இயக்கப்படும் 23 ஆட்டோக்கள் மூலம் தோ்தல் விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில், நாள்தோறும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் ஆட்சியரகத்தில் தொடங்கி சேலம் சாலை, துறையூா் சாலை, திருச்சி சாலை, மோகனூா் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தோ்தல் குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வ.சந்தியா (பொது), க.ராமச்சந்தின் (வேளாண்மை), உதவி ஆணையா் (தொழிலாளா் நலத்துறை) கே.பி.இந்தியா, ரெட் கிராஸ் செயலா் சி.ஆா்.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.