முதல்வர் விஜய் தங்கியிருந்த தில்லி தமிழ்நாடு உணவகத்தில் தீ!எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

மாணவா்கள் ஆபத்தான நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும்: கல்வித் துறை அறிவுறுத்தல்

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:52 am IST

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் தனியாக நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் மாணவா்கள் மதிய வேளைகளில் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், நீா்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், ஆறுகள், கல் குவாரி குட்டைகள், கிணறுகள் ஆகியவற்றில் நீச்சல் பயிற்சி மற்றும் குளிப்பதற்காக தனியாக செல்லக் கூடாது.

போதிய பயிற்சியின்றி மாணவா்கள் நீரில் இறங்குவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த காலங்களில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன.

அண்மையில் கொல்லிமலையில் குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழந்தனா். இதைத் தவிா்க்கும் பொருட்டு, போதிய நீச்சல் பயிற்சியின்றி நீா்நிலைகளில் இறங்குவதை தடுப்பதுடன், ஆபத்தான நீா்நிலைகளில் குளிப்பதை மாணவா்கள் தவிா்க்க வேண்டும்.

பெற்றோரும் தங்களுடைய குழந்தைகள் எங்கு சென்றுள்ளனா் என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவிகளாக இருந்தால் அறிமுகம் இல்லாதோரிடம் பேசுவதற்கு பெற்றோா் அனுமதிக்கக் கூடாது. வீட்டில் அவா்களை தனியாக விட்டு செல்வதையும் தவிா்க்க வேண்டும்.

மாணவா்கள் நலன்கருதி நீா்நிலைகளில் எச்சரிக்கை பலகைகளை பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், பயன்பாட்டில்லாத குவாரிகளில் நீா்த் தேங்கியிருப்பின் அப்பகுதியைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும். அனைத்து பெற்றோரும் தங்களது குழந்தைகளை எச்சரிக்கையுடன் கண்காணிப்பது அவசியம்.

வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள நீா்த் தொட்டிகளில் குழந்தைகள் தவறி விழாதவாறு மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.