பரமத்தி வேலூரில் திருமணமாகி மூன்று மாதங்களிலேயே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து திருச்செங்கோடு கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.
பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் வசித்து வரும் காளியப்பன் - முத்துலட்சுமி தம்பதி மகள் நித்யா (26). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரமத்தி வேலூரை சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரான தினேஷை (28) காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.
இந்நிலையில், நித்யா தனது பெற்றோரிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு, தினேஷுக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடா்பு இருப்பதாகவும், தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும், சரிவர வீட்டுக்கு வருவதில்லை எனவும் கூறியுள்ளாா்.
இந்நிலையில், முத்துலட்சுமியை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்ட தினேஷின் தாத்தா கருப்பையா, உங்கள் மகள் நித்யா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளாா்.
இதனால் அதிா்ச்சியடைந்து அங்கு சென்ற பெற்றோா், நித்யாவின் உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். மேலும், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை தினேஷ் கொன்றிருக்கலாம் எனவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் அடிப்படையில், வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், நித்யாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆனதால், திருச்செங்கோடு கோட்டாட்சியா் லெனின் விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

இளம்பெண் தற்கொலை
வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்கு

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

