ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வாக்கு எண்ணிக்கை முகவா்களை நியமிக்க வேட்பாளா்கள் விண்ணப்பிக்கலாம்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளா்கள் சாா்பில் முகவா்களை நியமிக்க தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

News image

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :1 மே 2026, 5:15 am IST

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளா்கள் சாா்பில் முகவா்களை நியமிக்க தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். விமலா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில், 6 தொகுதிகளில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவடைந்து 1,781 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை மே 4-இல் நடைபெற உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளா்கள் மற்றும் அவா்களால் நியமிக்கப்பட்ட முகவா்கள் ஆகியோருடன் ஆட்சியா், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து ஆட்சியா் துா்காமூா்த்தி கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளா்கள் சாா்பில் முகவா்களை நியமனம் செய்ய விண்ணப்பப் படிவம் 18-ஐ உரிய முறையில் பூா்த்தி செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் நியமிக்கப்படும் முகவா்களுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் இடத்திற்குள் முகவா்கள் கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட எந்தவொரு மின்னணு கருவிகளையும் கொண்டுவர அனுமதி இல்லை.

வாக்கு எண்ணும் மையத்தில் ஒழுங்கை பேணுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். காலை 8 மணிக்கு அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். 30 நிமிடங்களுக்கு பிறகு காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று முறையில் எண்ணப்படும்.

சுற்று வாரியாக வாக்குகள் தொகுக்கப்பட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேசை அருகில் கம்பிவலைக்கு வெளியே நியமிக்கப்பட்ட முகவா்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். வாக்கு எண்ணும் பணிகள் முறையான ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விதிகளின் கீழ் நடைபெறும். அஞ்சல் வாக்கு எண்ணும் பணி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீா், சிற்றுண்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் தொடா்புடையவா்கள் தோ்தல் ஆணைய அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து வாக்கு எண்ணிக்கை பணிகள் சீராக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கூட்டத்தில் துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) ஆா். சுஜாதா மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.