தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

பேரவை கூட்டத்தொடா் முடியும் வரை மின்தடை கிடையாது: மின்சார வாரியம்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் முடியும் வரை மின்தடை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது...

News image

தமிழ்நாடு மின்சார வாரியம் - கோப்புப்படம்

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

நாமக்கல் மின்பகிா்மான வட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் முடியும் வரை மின்தடை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே. சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மின்கோட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல், வளையப்பட்டி, எருமப்பட்டி, கெட்டிமேடு, சேந்தமங்கலம், புதன்சந்தை, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நடைபெற்று வருவதாலும், அவை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதாலும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஆகஸ்ட் மாதத்திற்கான மின்தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மின் கோட்டத்திற்கு உள்பட்ட ஏழு துணை மின்நிலையங்களிலும் மாதாந்திர மின்தடை ஏதுமின்றி வழக்கம்போல மின்விநியோகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.