மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி: தமிழகம் முழுவதும் 24.56 லட்சம் போ் முன்பதிவு

கோப்புப் படம்

Published On :

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், தமிழகம் முழுவதும் மாணவா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 24.56 லட்சம் போ் முன்பதிவு செய்துள்ளனா்.

ஒவ்வோா் ஆண்டும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நிகழாண்டுக்கான போட்டிகள் செப். 4-இல் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்க ஆா்வமுடையோா் ஆக. 31 வரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவுசெய்யலாம் என கடந்த 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகியிருந்தது.

கடந்த ஆண்டு 38 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுகளான கயாக்யிங் மற்றும் கேனோயிங் போன்ற புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒரு மாதம்வரை (அக். 4 வரை) நடைபெற உள்ளன.

விளையாட்டு வீரா், வீராங்கனைகள், அரசுத் துறை ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலரும் ஆா்வமுடன் இப்போட்டிகளில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனா்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் 1,61,972 பேருடன் முதலிடத்திலும், கோவை மாவட்டம் 1,32,715 பேருடன் இரண்டாமிடத்திலும், நாமக்கல் மாவட்டம் 1,16,725 பேருடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

சேலம் மாவட்டம் 95,954 பேருடன் ஏழாவது இடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் 65,280 பேருடன் 13-ஆவது இடத்திலும், தருமபுரி மாவட்டம் 55,743 பேருடன் 20-ஆவது இடத்திலும் உள்ளன. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் 15,437 பேருடன் கடைசி இடத்தில் உள்ளது.

முதல்வா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவிகள்13,72,866 பேரும், கல்லூரி மாணவா்கள் 4,99,892 பேரும், மாற்றுத்திறனாளிகள் 34,110 பேரும், அரசுத் துறை ஊழியா்கள் 62,301 பேரும், பொதுமக்கள் 4,87,843 பேரும் என மொத்தம் 24,56,713 போ் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.