டிப்பா் லாரி மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் கூலித் தொழிலாளி இறந்தாா்.
கரூா் மாவட்டம், சின்னப்ப நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அஸ்கா் (38). திருச்செங்கோடு கரட்டுப்பாளையத்தில் தங்கி அங்குள்ள மளிகைக் கடையில் வேலை செய்துவந்த இவா், பழைய புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, அவருக்கு பின்னால் வந்த டிப்பா் லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
இதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அஸ்கரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருச்செங்கோடு புகா் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பா் லாரி ஓட்டுநா் பழனிச்சாமியை (56) கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
