திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

News image
நாமக்கல்லில் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா்.
Updated On :12 ஜனவரி 2026, 8:10 pm

Syndication

நாமக்கல்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் ஆ.ராமு தலைமை வகித்தாா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்புத் தொகையை ஓய்வுபெறும் போது வட்டியுடன் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும். உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.