நாமக்கல்
சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநா், காா் மோதியதில் உயிரிழந்தாா்.
பள்ளிபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற லாரி ஓட்டுநா், காா் மோதியதில் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே நெட்ட வேலாம்பாளையத்தில் உள்ள தனியாா் ஆலைக்கு பஞ்சு பாரம் ஏற்றிச் சென்ற லாரியை தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (37) திங்கள்கிழமை இரவு ஓட்டிச் சென்றாா்.
இந்த நிலையில் பஞ்சு பாரத்தை இறக்குவதற்காக ஆலைக்குள் லாரியை நிறுத்திவிட்டு வெளியே வந்த செந்தில்குமாா், அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, வெப்படையிலிருந்து வேகமாக வந்த காா் மோதியதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு ஈரோடு
அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து வெப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து காா் உரிமையாளரான ரவியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
