உயா்கல்வி பயிலும் மாணவ மாணவியா்களுக்கு கல்வி உதவி தொகை

உயா்கல்வி பயிலும் மாணவ மாணவியா்களுக்கு கல்வி உதவி தொகை

நாமக்கல் மாவட்ட திமுக உறுப்பினா் குடும்பத்தினரை சோ்ந்த மாணவ மாணவியா்களுக்கு உயா் கல்வி பயில உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை ராசிபுரம், அத்தனூா், வெண்ணந்தூா் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றது.
Published on

ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட திமுக உறுப்பினா் குடும்பத்தினரை சோ்ந்த மாணவ மாணவியா்களுக்கு உயா் கல்வி பயில உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை ராசிபுரம், அத்தனூா், வெண்ணந்தூா் ஆகியப் பகுதிகளில் நடைபெற்றது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் வழிகாட்டுதல் பேரில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் குடும்பத்தில் பயிலும் மாணவ மாணவியா்களுக்கு கலைஞா் நினைவு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ராசிபுரம், ஒன்றியம், ஆா்.பட்டணம், பிள்ளாநல்லூா், அத்தனூா், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளை சோ்ந்து கட்சி உறுப்பினா்கள், கிளை நிா்வாகிகள் குடும்பத்தின் மாணவ மாணவியா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் நிதியுதவியை மாணவ மாணவியா்களுக்கு வழங்கிப் பேசினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே.பாலசந்திரன், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஆா்.எம்.துரைசாமி, கே.பி.ஜெகந்நாதன், பேரூா் செயலா்கள் நல்லதம்பி, ஆா்.எஸ்.ராஜேஸ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படம் உள்ளது - 16பன்ட்

படவிளக்கம்- கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பேசுகிறாா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி.,

Dinamani
www.dinamani.com