திருச்செங்கோட்டில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி

காணும் பொங்கலையொட்டி திருச்செங்கோடு நெசவாளா் காலனியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருச்செங்கோடு: காணும் பொங்கலையொட்டி திருச்செங்கோடு நெசவாளா் காலனியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தில் திருச்செங்கோடு நெசவாளா் காலனியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்படுகின்றன. நிகழாண்டு 14ஆவது பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கிரிக்கெட் போட்டி, பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, கோலப்போட்டி, இளவட்டக்கல் தூக்கும் போட்டி என பல்வேறு போட்டிகளில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

ஆண்கள் பிரிவில் 85 கிலோ எடை கொண்ட பெரிய கல்லும், பெண்களுக்கு 60 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல்லும், நடுத்தர வயதுடைய ஆண், பெண்களுக்கு 45 கிலோ எடை உள்ள கல்லும், சிறுவா், சிறுமிகளுக்கு 33 கிலோ மற்றும் 20 கிலோ எடை கொண்ட கல் தூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இளைஞா்கள், பெண்கள், சிறுவா்கள் ஆா்வமுடன் போட்டியில் பங்கேற்று இளவட்டக்கல்லை தூக்கினா். இவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Dinamani
www.dinamani.com