மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தை முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

News image
Updated On :18 ஜனவரி 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

தை முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் சிறப்பு பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி அருள்பாலித்து வருகிறாா்.

இங்கு, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பௌா்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.