பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை கைதுசெய்த வேலூா் போலீஸாா், அவா்களிடமிருந்து மொத்தம் 46 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள வள்ளுவா்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்த ஸ்ரீராம் (35) என்பவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, பரமத்தி வேலூா் நான்கு சாலை அருகே உள்ள மதுபானக் கூடத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பரமத்தி வேலூா், வடக்கு தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (33) என்பவரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.