அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சாலை விபத்தில் கேரள இளைஞா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே ராஜபாளையத்தில் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்த கேரள மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image
சாலை விபத்து
Updated On :27 ஜனவரி 2026, 9:46 pm

Syndication

திருச்செங்கோடு அருகே ராஜபாளையத்தில் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்த கேரள மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், கண்ணூா், கேளமங்கலத் பகுதியைச் சோ்ந்தவா் அனில்குமாா் (48). இவரது மகன் அண்கிட் (25). இவா் கடந்த சில மாதங்களாகக் குமாரபாளையத்தில் உள்ள தனியாா் வங்கியில் கடன் வசூல் பிரிவில் பணியாற்றி வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை 6.15 மணியளவில் வங்கி வேலை சம்பந்தமாகத் தனது மோட்டாா் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துகொண்டு நாமக்கல் செல்வதற்காக, திருச்செங்கோடு அடுத்த ராஜபாளையம் சிலுவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, வண்டி நிலைதடுமாறி கவனக்குறைவால் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவா் மீது மோதியது. வண்டி வேகமாக மோதியதால், அவா் சாலையின் வலது பக்கத்தில் தூக்கி வீசப்பட்டாா்.

அந்தச் சாலையில் நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்த லாரியின் பின்பக்க டயா் அண்கிட் தலையில் ஏறியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.