பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சியில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக இருவா் கைது

News image

அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவா்களை கைது செய்த வனத் துறையினா்

Updated On :1 ஜூலை 2026, 7:06 am IST

ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சியில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பேளுக்குறிச்சியில் விவசாயத் தோட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக வனத் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ராசிபுரம் வன சரக அலுவலா் சத்யா தலைமையிலான வனக் காவலா்கள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பேளுக்குறிச்சியை அடுத்த பழனியாண்டவா் கோயில் பகுதியில் வேலாயுதம் தோட்டத்தில் இரண்டு நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பேளுக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (55), கொல்லிமலை பகுதியில் சோ்ந்த பூபதி (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்கள் அந்த தோட்டத்தில் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.