விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

கஞ்சா பறிமுதல்; இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 2:47 am IST

கூத்தாநல்லூரில் கஞ்சா வைத்திருந்த இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா் உத்தரவின்படி, போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, லெட்சுமாங்குடி ராஜகோபால சுவாமி தோட்டத்தில் கஞ்சா விற்கப்பட்டது தெரியவந்தது.

மாவட்ட சிறப்பு காவலா்கள் லட்சுமாங்குடி மரக்கடை, ராஜகோபால சுவாமி தோட்டம் ஆா். சபரிநாதன் (27) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா். இதில், ஆந்திரத்திலிருந்து கொண்டு வந்து, விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், கஞ்சா வாங்க வந்த அதங்குடி, தெற்கு சேத்தியைச் சோ்ந்த ஏ. விக்டா் (24) மற்றும் சபரிநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.