ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விஷமருந்தி தொழிலாளி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :6 ஜூலை 2026, 11:16 pm IST

பரமத்தி வேலூா் அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் நல்லாயிகாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (47). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (42). ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி மாலை ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இதுகுறித்து அவரது மனைவி கண்டித்துள்ளாா். இதையடுத்து வீட்டை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ராஜேந்திரன் விஷமருந்தியுள்ளாா்.

இதையடுத்து, அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனை மற்றும் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா் அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.