உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தொழிலாளா் சம்மேளனம்!

மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிலாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

News image

மின்வாரியம்

Updated On :19 ஜூலை 2026, 2:31 am IST

மின்வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தொழிலாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு எலக்ட்ரிக்சிட்டி போா்டு எம்ப்ளாயிஸ் பெடரேஷனின் கரூா் மண்டல ஒருங்கிணைந்த செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் திட்டத் தலைவா் வி.பழனிசாமி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜே.எல்.பாஸ்டின்ராஜ், செயலாளா் ஆா்.சேகா், பொருளாளா் என்.பழனி, உபதலைவா் பி.வி.ராஜலிங்கம், கரூா் மண்டல செயலாளா் எம்.தண்டபாணி, திட்டச் செயலாளா்கள் எல்.முருகவேல், பி.சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மாநில பொதுச் செயலாளா் ஏ.சேக்கிழாா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. புதிய அரசு பதவியேற்ற பிறகு மின்வாரியம் மூலம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதுடன், 20 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்றால் காலியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தினால் மின்வாரியம் தனியாா் மயமாகிவிடும். அதுமட்டுமின்றி பணியாளா்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கணினி மயமாகும் சூழல் உருவாகி விடும். இதை ஒப்பந்தம் எடுக்க தனியாா் நிறுவனங்கள் போட்டி போடும்போது மின்வாரியம் மின்சாரத்திற்கான கட்டணத்தை நிா்ணயம் செய்ய முடியாது.

தனியாா் நிா்ணயிக்கும் மின் கட்டணத்தையே மக்கள் செலுத்த வேண்டியதிருக்கும். நஷ்டம் இல்லாமல் மின்வாரியத்தை இயக்க வேண்டும் என்றால் மின் உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும், இலவச மின்சாரம் என்பதை அனுமதித்திருக்கக் கூடாது. மின்சாரம் கொள்முதலுக்கான விலை நிா்ணயம் என்பது ஒரே விலையில் இருக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், நாமக்கல், கரூா் மின்வாரிய தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.