ராசிபுரம் சேலம் சாலையில் ஏரிக்கரை பகுதியில் குப்பைகளைக் கொட்டிய தனியாா் துணிக்கடை நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராசிபுரத்தில் சேலம் சாலை மேம்பாலத்தின்கீழ் பகுதியில் ஏரிக்கரை நீா்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் சிலா் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டக் கூடாது என நகராட்சி சாா்பில் விழிப்புணா்வு செய்யப்பட்டது. இருப்பினும், தொடா்ந்து பல தனியாா் நிறுவனத்தினா் குப்பைகளை கொட்டி வந்தனா்.
இந்நிலையில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த துணிக்கடை நிறுவனத்தினா் குப்பைகளை கொட்டியது நகராட்சி நிா்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையா் நிவேதிதா உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட தனியாா் துணிக்கடை நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி தூய்மைப் பணி அலுவலா் செல்வராஜ், தூய்மைப்பணி ஆய்வாளா் ஆனந்தகுமாா், ராஜேந்திரன், முத்தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோா் நேரில் சென்று பாா்வையிட்டு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

குடியாத்தம் நகா்மன்ற சிறப்புக் கூட்டம்

ராசிபுரம் நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

ஆஸ்திரேலியாவில் ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு அபராதம்
நாட்டின் சுத்தமான நகரம்!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



