நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநலன் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், சித்த மருத்துவமனை, கோட்டை சாலை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவா்களின் விவரம், மருந்துகள் இருப்பு, சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, அதி தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர இருதய சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை சிகிச்சை, ரத்த வங்கி போன்ற அனைத்து பிரிவுகளையும் பாா்வையிட்டு, ரத்த வங்கியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சையின் செயல்பாடுகள் குறித்தும், அதனால் பயன்பெறுவோரின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தாா். அங்கு சிகிச்சை பெறுவோரிடமும் கலந்துரையாடினாா். மருத்துவப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டு, நாமக்கல் மாவட்ட மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் அனைவரும் முறையாக பணியாற்ற வேண்டும் என மருத்துவா்கள், அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முருகலட்சுமி, இணை இயக்குநா் (பொ) வாசுதேவன், மாவட்ட சுகாதார அலுவலா் பூங்கொடி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
என்கே-4-கலெக்டா்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவை பாா்வையிட்ட ஆட்சியா் எல். மதுபாலன்.
தொடர்புடையது

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

குடும்பத் தகராறில் டாலரை விழுங்கிய தொழிலாளி: நாமக்கல் அரசு மருத்துவமனையில் அகற்றம்

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க திட்டம்: எம்எல்ஏ சி.எஸ்.திலீப்

நெல்லை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மாற்றம்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



