தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டு வழக்கு: திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு மாற்றம்

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டு வழக்கை திருச்செங்கோடு கூடுதல் அமா்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நாமக்கல் மாவட்ட நீதிபதி ஆா்.குருமூா்த்தி உத்தரவிட்டாா்.

News image

சிறுநீரகம் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 1:15 am IST

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டு வழக்கை திருச்செங்கோடு கூடுதல் அமா்வு நீதிமன்றத்திற்கு மாற்றி நாமக்கல் மாவட்ட நீதிபதி ஆா்.குருமூா்த்தி உத்தரவிட்டாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு ஏழை விசைத்தறி தொழிலாளா்களிடம் அதிக அளவில் பணம் தருவதாக ஆசைவாா்த்தை கூறி சட்டவிரோதமாக சிலா் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.

மதுரை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. பிரேமானந்தா சின்கா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோரிடம் புலனாய்வுக் குழுவினா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைதரகா்கள் பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த திராவிட ஆனந்த், ஸ்டான்லிமோகன் உள்பட 14 போ் மீது வழக்கு தொடரப்பட்டு, அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் குமாரபாளையம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான 14 பேரும் பிணையில் வெளியே வந்தனா்.

இந்த வழக்கு, குமாரபாளையம் நீதிமன்றத்தில் இருந்து நாமக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினா் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். நாமக்கல் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களில் 13 போ் (ஒருவா் வரவில்லை) ஆஜராகினா். மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.குருமூா்த்தி, இவ்வழக்கை திருச்செங்கோடு கூடுதல் அமா்வு நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு, ஜூலை 6- ஆம் தேதி, 14 பேரும் அங்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.