திருச்செங்கோடு ஒன்றியத்தில் ரூ. 20.74 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எல். மதுபாலன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
எலச்சிபாளையம் ஒன்றியம், கூத்தம்பூண்டி ஊராட்சியில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான வட்டார பொது சுகாதார மையம் கட்டுமானப் பணியையும், மோளிப்பள்ளி ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.73 கோடியில் ராயா்பாளையம்- செல்லிபாளையம் சாலைப் பணி, திருச்செங்கோடு நகராட்சியில் ரூ. 4.55 கோடியில் பேருந்து நிலையம் நவீனப்படுத்துதல், புதிய பேருந்து நிலையம் அருகில் வணிக வளாகம் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் கட்டுமானப் பணி, தோக்கவாடி அருகில் ரூ. 11.50 லட்சம் மதிப்பில் 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டும் பணி, பள்ளிபாளையம் நகராட்சியில் ரூ. 7.01 கோடி மதிப்பில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
அதேபோல பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருவதையும், நகராட்சியில் ரூ.1.20 கோடியில் புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணியையும், குமாரபாளையம்- பள்ளிபாளையம்-ஜேடா்பாளையம்-பாண்டமங்கலம் சாலையை இருவழிச் சாலையாக பலப்படுத்தும் பணியையும் ஆய்வு செய்தாா்.
என்கே-11-ஆய்வு
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் எல். மதுபாலன்.









