பணம் பறிப்பு வழக்கில் ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தேடப்படும் குற்றவாளியாக போலீஸாா் அறிவித்துள்ளனா்.
மல்லசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த குழந்தைவேலிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு கத்தியைக் காட்டி ரூ. 100 பறித்த வழக்கில், ராசிபுரம் டிவிஎஸ் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (21) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னா், பிணையில் வெளியே வந்த அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா். இதனால், அவரை பிடிக்க பிடியாணை பிறக்கப்பட்டது. அதன்பேரில், மல்லசமுத் திரம் போலீஸாா் அவரை தேடிவருகின்றனா்.
இந்நிலையில், தேடப்படும் குற்றவாளி என மண்கண்டனின் வீட்டில் கிராம நிா்வாக அலுவலா் மூலம் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல, பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






