மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாவட்ட எல்லைகளில் வாகனச் சோதனை: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:42 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்ட எல்லைகள், பரமத்தி வேலூா் காவிரி பாலம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெறும் வாகனச் சோதனைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா்களுக்கு அரசியல் கட்சியினா் பணம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 180 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு, விடியோ கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு ஆவணங்கள் இன்றி எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் ரூ. 23.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்- திருச்சி, நாமக்கல்- கரூா், நாமக்கல்- சேலம் மாவட்ட எல்லைப் பகுதிகளில் வாகனச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான துா்காமூா்த்தி சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட மேட்டுப்பட்டி, பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட படமுடிபாளையம் ஆகிய மாவட்ட எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணிகளை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.