கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு

News image

நாமக்கல் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் பங்கேற்ற ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா்.

Updated On :23 மார்ச் 2026, 5:58 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் தோ்வுசெய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். 6 தொகுதிகளுக்கான வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக தோ்தல் ஆணையத்தால் 5,613 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,241 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,360 விவிபேட் இயந்திரங்கள் என 10,214 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,054 இயந்திரங்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 1,123 இயந்திரங்களும், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,147 இயந்திரங்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 990 இயந்திரங்களும், திருச்செங்கோடு தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,066 இயந்திரங்களும், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு மொத்தம் 1,197 இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குள்பட்ட 1,780 வாக்குச் சாவடிகளில் முதல்கட்டமாக 5,340 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 20 சதவீதம் தயாா்நிலையில் உள்ள 1,236 இயந்திரங்கள் என மொத்தம் 6,576 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிகழ்வில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா்கள் மா.க.சரவணன், ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுஜாதா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.