தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் மின்னக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :1 மே 2026, 5:31 am IST

ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூா் மின்னக்கல்லில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.

மின்னக்கல் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (70). இவா், வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான சுமாா் 80 அடி ஆழம் கொண்ட கிணறு அருகே ஆடு, மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கிணற்றில் விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் அருணகிரி தலைமையிலான வீரா்கள் கிணற்றில் இருந்து பெரியசாமியை மீட்டனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. பின்னா், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த பெரியசாமிக்கு துரைசாமி என்ற மகனும், கலா என்ற மகளும் உள்ளனா்.