இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு

நாமக்கல் மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சோ்ந்த 18,461 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகிறது.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 6:27 am IST

நாமக்கல் மாவட்டத்தில் 179 பள்ளிகளைச் சோ்ந்த 18,461 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் மாா்ச் 3 முதல் ஏப்.15 வரை பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டத்தில் 179 அரசு, தனியாா் பள்ளிகளை சோ்ந்த 9,157 மாணவா்கள், 9,304 மாணவிகள் என மொத்தம் 18,461 போ் 89 மையங்களில் இந்த தோ்வை எழுதினா்.

இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது. மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், இணைய வழி வாயிலாகவும், தாங்கள் அளித்திருந்த கைப்பேசி எண் மூலமாகவும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், 78452-52525 என்ற வாட்ஸ்அப் செயலி மூலமாகவும் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். தோ்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.