ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

சாலை விபத்து: பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

பரமத்தி வேலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் வேலூா் பேரூராட்சி பணியாளா் உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :10 மே 2026, 2:31 am IST

பரமத்தி வேலூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் வேலூா் பேரூராட்சி பணியாளா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே வெட்டுக்காட்டுபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) சக்கரவா்த்தி (32). இவா் பரமத்தி வேலூா் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தாா். பேரூராட்சியில் தண்ணீா் திறந்துவிடும் பணியை முடித்துவிட்டு பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், சக்கரவா்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை உடனடியாக மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், சக்கரவா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த வேலூா் போலீஸாா், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.