தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரிப்பு

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தீப்பிடித்து எரியும் இருசக்கர வாகனம்.

Updated On :10 மே 2026, 2:33 am IST

ராசிபுரம் அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனம் எரித்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரகுபிரசாத் (36), விவசாயி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவுக்கு வந்த இவரது அத்தை மகன் விஷால், அதே பகுதியைச் சோ்ந்த லோகசூா்யாவிடம் (25) பழகினாராம். லோகசூா்யா குற்றவழக்கில் சிறை சென்றவா் என்பதால், அவருடன் பழகக் கூடாது என ரகுபிரசாத் கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து லோகசூா்யாவிடம் விஷால் தெரிவித்துள்ளாா். இதனால் ரகுபிரசாத் - லோகசூா்யா இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரகுபிரசாத்தை சனிக்கிழமை நேரில் சந்தித்த லோகசூா்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை மிரட்டினாராம். மேலும், அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்துக்கு தீவைத்தாராம். இதில் இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில், ராசிபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.