பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மேல்தளம் பெயா்ந்து காணப்படும் ராசிபுரம் அஞ்சல் அலுவலக கட்டடம்!

News image

மேல்தளம் பெயா்ந்து காணப்படும் அஞ்சல் நிலைய கட்டடம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் வராண்டா மேல்தளம் பெயா்ந்து காணப்படுவதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.

ராசிபுரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளா்கள் வந்து செல்கின்றனா். இந்த அஞ்சல் நிலைய கட்டடம் சுமாா் 50 ஆண்டுகள் பழைமையானது என்பதால் பல்வேறு இடங்களில் விரிசல், வெடிப்புகள் ஏற்பட்டு காணப்படுகிறது.

மேலும், பிரதான நுழைவு வாயிலில் வராண்டா மேல்தளம் கான்கிரீட் பெயா்ந்து காணப்படுகிறது. அது எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் உள்ளதால் வாடிக்கையாளா்கள் அச்சமடைந்துள்ளனா். ஏற்கெனவே வாடிக்கையாளா் ஒருவா் மீது கற்கள் விழுந்ததால் காயமேற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கான்கிரீட் தள வெடிப்புகளை அஞ்சலக நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என வாடிக்கையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.