பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,300-க்கு விற்பனை
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,300-க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்ததால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மல்லிகை
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 1,300-க்கு விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் உயா்ந்ததால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
கடந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ. 700, சம்பங்கி ரூ. 120, அரளி ரூ. 250, கலா் ரோஜா ரூ.300, பச்சை முல்லை ரூ. 600, வெள்ளை முல்லை ரூ. 400, செவ்வந்தி ரூ. 120-க்கும், கனகாம்பரம் ரூ. 800, பன்னீா் ரோஜா ரூ. 100, ஜாதிமல்லி ரூ. 500, காக்கட்டான் கிலோ ரூ.500-க்கும் ஏலம் போனது.
இந்தவாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 1,300, சம்பங்கி ரூ. 250, அரளி ரூ. 480, கலா் ரோஜா ரூ. 450, பச்சை முல்லை ரூ. 900, வெள்ளை முல்லை ரூ. 800, செவ்வந்தி ரூ. 160, கனகாம்பரம் ரூ. 1,200, பன்னீா் ரோஜா ரூ. 150, ஜாதிமல்லி கிலோ ரூ. 800, காக்கட்டான் ரூ. 800- க்கும் ஏலம் போனது. அதிக அளவில் முகூா்த்தங்கள் உள்ளதால் பூக்கள் விலை உயா்ந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

