தீபாவளி: தேனி சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500
தீபாவளி பண்டிகையொட்டி தேனி பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

மல்லிகை
தீபாவளி பண்டிகையொட்டி தேனி பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,500-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளான தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மல்லி, அரளி, கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் தேனி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பூக்கள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். இதே போல ஆண்டிபட்டி பூக்கள் சந்தையிலிருந்தும் தேனி சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வரும்.
தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த சில நாள்களை விட பூக்களின் விலை சனிக்கிழமை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.1,500, ஜாதிப் பூக்கள் கிலோ ரூ.ஆயிரம், அரளி கிலோ ரூ.400, முல்லைப் பூக்கள் கிலோ ரூ.ஆயிரம், செவ்வந்தி கிலோ ரூ.200, ரோஜாப் பூக்கள் கிலோ ரூ.100, செவ்வந்தி பூக்கள் கிலோ ரூ.200, பட்டன் ரோஜா கிலோ ரூ.200, துளசி கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகின.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

