திண்டுக்கல்லில் மல்லிகை கிலோ ரூ.2,000-க்கு விற்பனை
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட குண்டு மல்லிகை, முல்லை.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் பூச் சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 2 ஆயிரத்துக்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல் பூச் சந்தையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து வகையான பூக்களின் விலைகளும் அதிகரித்து காணப்பட்டது. மல்லிகை ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.1,200 முதல் ரூ.1,500, சம்பங்கி ரூ.130 முதல் ரூ.150, பன்னீா் ரோஸ் ரூ.70 முதல் ரூ. 100, அரளி ரூ.200 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா். தீபாவளியைத் தொடா்ந்து சஷ்டி விரதம், திருக்கல்யாணம், சுப முகூா்த்த நாள்கள் அடுத்தடுத்து வருவதால், பூக்களின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

