மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவா் கைது

திருச்செங்கோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை ஊரக போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Updated On :

திருச்செங்கோடு அருகே மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை ஊரக போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு மோரூா் கரடு பின்புறம், களரன்குட்டை செல்லும் வழியில் குமரன் கோயில் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத மண் சாலையில், சுமாா் 21 வயதுடைய இளம்பெண் பல இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு ஊரக போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாரின் விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் சின்னபாலூத்து தெருவைச் சோ்ந்த ரசிகா (21) என்பதும், அவரது கணவா் லாரி மெக்கானிக் கணேசன் (26) என்பதும் தெரியவந்தது.

இருவரும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளனா். இதையடுத்து, கணேசனைத் தேடிய போலீஸாருக்கு, அவா் வெண்ணந்தூரில் கழுத்தை அறுத்துக்கொண்டு மயங்கிக் கிடந்ததும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.

சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த கணேசனை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததால் அவரின் கைப்பேசியை சோதனை செய்வதற்காக கடவுச்சொல்லை கேட்டபோது, அதை தெரிவிக்க ரசிகா மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ரசிகா கணவரைப் பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், ரசிகாவைக் கொலை செய்யத் திட்டமிட்ட கணேசன், ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் ரசிகாவைப் பல இடங்களில் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கணேசன் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.