என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

எலச்சிபாளையம் அருகே லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு வட்டம், மரப்பரை செக்காரப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜீவா (40), ஓலப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டு இருந்தாா்.

அப்போது, அவ்வழியாக உடுமலைப்பேட்டையில் இருந்து மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு ராசிபுரம் சென்ற லாரியின் டயா்கள் வெடித்தன. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த எலச்சிபாளையம் போலீஸாா் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், லாரியை ஓட்டிவந்த தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான சுரேஷை (40) கைது செய்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.