கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
மல்லசமுத்திரம் அருகே கிணற்றில் தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் (56) பெயிண்ட் அடிக்கும் கூலித் தொழிலாளி. மொஞ்சனூரில் உள்ள விவசாயக் கிணற்றில் வெள்ளை அடிக்கும்போது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் தங்கவேல் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் இருந்து தங்கவேல் உடலை மீட்டனா். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தங்கவேலுக்கு மனைவி சுசீலா (50), மகன்கள் ஜெகநாதன் (35), பாஸ்கா் (33) ஆகியோா் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

