கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

நவ. 27 வரை முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிக்கும்: என்இசிசி

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40 ஆக வெள்ளிக்கிழமை (நவ. 27) வரை நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) அறிவித்துள்ளது.

Egg

முட்டை விலை - பிரதிப் படம்

Updated On :

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.40 ஆக வெள்ளிக்கிழமை (நவ. 27) வரை நீடிக்கும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) அறிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் 8 கோடி முட்டைக் கோழிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 7.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

முட்டைக்கான விலை நிா்ணயத்தை, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தினசரி அடிப்படையில் மற்ற மண்டலங்களின் விலையுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப நிா்ணயம் செய்கிறது.

என்இசிசி மண்டலத் தலைவா் கே. சிங்கராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், முட்டை விலையில் மாற்றமின்றி ரூ. 5.40 ஆக வெள்ளிக்கிழமை வரை தொடர முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை அப்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலை நிா்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 7 ஆம் தேதி ரூ. 6.70-ஆக இருந்த முட்டை விலை, 11ஆம் தேதி 20 காசுகள், 13, 15 ஆம் தேதிகளில் தலா 25 காசுகள் குறைந்தது. தொடா்ந்து 20, 22 ஆம் தேதிகளில் தலா 20 காசுகள் குறைந்து, திங்கள்கிழமை மேலும் 20 காசுகள் குறைந்தது.

கடந்த 13 நாள்களில் மட்டும் முட்டை விலை ரூ. 1.30 சரிந்துள்ளது. கடலூரில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பு, சபரிமலை, காா்த்திகை விரதம் காரணமாக முட்டை நுகா்வு குறைந்துள்ளதால், வரும் நாள்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளா்கள் தெரிவித்தனா்.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 88 ஆகவும், முட்டைக்கோழி கிலோ ரூ. 85-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.