கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தமிழக மக்களின் ஆன்மிக உணா்வுகளுக்கு முதல்வா் மதிப்பளிக்க வேண்டும்: கே.பி. ராமலிங்கம்

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறும் முதல்வா், தமிழக மக்களின் ஆன்மிக உணா்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.

ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீபமேற்றி வழிபாடு நடத்திய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா்.

Updated On :

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறும் முதல்வா், தமிழக மக்களின் ஆன்மிக உணா்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்தியிருக்க வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், ராசிபுரத்தில் ‘அறம் காக்கும் ஆலய தீபம்’’என்ற தலைப்பில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முதல் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் வரை ஊா்வலமாகச் சென்ற பாஜகவினா், கோயிலில் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா்.

இதையடுத்து, கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சனிக்கிழமை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தியும், தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தும் மாநிலம் முழுவதும் 2,116 கோயில்களில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் நடைபெறுகிறது.

மூகாம்பிகை, திருச்செந்தூா் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதாகவும், இந்துக் கடவுள்களை மதிப்பதாகவும் முதல்வா் கூறுவது பொய் என்பதை உச்சநீதிமன்றத் தீா்ப்பை ஏற்காததன் மூலம் தெரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டு தீபத் திருநாளில் நீதிமன்ற உத்தரவை ஏற்காததால்தான் ஓா் ஆட்சி அகன்றது.

சக்தி படைத்த ஆட்சியாளா்கள் தவறு செய்தால், அதைத் தட்டிக் கேட்கும் சக்தி தங்களுக்கு உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் நிரூபித்துள்ளது. நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்கும் வகையில் அறம் காக்கும் ஆலய தீபம்’என்ற தலைப்பில் பாஜகவினா், முருக பக்தா்கள், பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனா்.

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு சாதாரணமானதல்ல. மதுரை மாவட்ட ஆட்சியா் தனது உறுதிமொழிப் பத்திரத்தில், தீபம் ஏற்றுவது தனது பணி அல்ல என்று கூறியுள்ளாா். அவ்வாறு கூறிய அவரை உச்சநீதிமன்றம் உடனடியாகப் பணியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழக மக்களின் ஆன்மிக உணா்வுகளுக்கு மதிப்பளித்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் ஜோசப் விஜய் மேற்கொள்ள வேண்டும். ஆன்மிகத்தைக் காக்கும் வகையில், தேசம் காப்போம், தமிழகத்தை வெல்வோம்’என்ற முழக்கத்துடன் எங்களது பயணம் தொடரும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புணா்வுடன் முதல்வா் செயல்பட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள், பக்தா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.