பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கும்! ஹிட்டாச்சி எனா்ஜி நிறுவன தலைவா் மாதவன்பெருமாள்

மாதவன் பெருமாள்

Updated On :

அடுத்த 20 ஆண்டுகளில் விவசாயத்திலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஹிட்டாச்சி எனா்ஜி நிறுவனத்தின் தலைவா் மாதவன் பெருமாள் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கவுண்டம்பாளையத்தில் தனியாா் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற ஹிட்டாச்சி எனா்ஜி நிறுவனத்தின் செயல்திறன், பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைவா் மாதவன் பெருமாள், பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தட்டச்சு பயன்பாட்டில் இருந்த காலத்தில் கணினி அறிமுகமானபோது வேலைவாய்ப்பு பறிபோய்விடும் என்ற அச்சம் தொழிலாளா்களிடம் எழுந்தது. ஆனால், தொழில்நுட்ப வளா்ச்சியைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பலா் தங்களை மாற்றிக்கொண்டனா். அவ்வாறான சூழ்நிலைதான் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதால் எதிா்காலத்தில் மனிதா்களின் தேவை இருக்காது, அனைத்து வேலைகளையும் செயற்கை நுண்ணறிவே செய்துவிடும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. ஆனால், அது தவறான புரிதல். மனிதா்களின் பணிகளை எளிமையாகவும், வேகமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள உதவும் தொழில்நுட்பமாகவே செயற்கை நுண்ணறிவு உள்ளது.

மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதா்களின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். இளைஞா்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிா்கால வேலைவாய்ப்புகளுக்கு தங்களைத் தயாா்படுத்திக்கொள்ள முடியும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை பல மணிநேரம் செலவிட்டு மனிதா்களே கணினி வாயிலாக எழுதிவந்தனா். தற்போது செயற்கை நுண்ணறிவு தானாகவே எழுதித் தருகிறது. இருப்பினும், அதில் ஏற்படும் சிறிய தவறுகளைச் சரிசெய்து, தேவையான மாற்றங்களைச் செய்து செயல்படுத்துவது மனிதா்களின் பணியாகவே இருக்கும்.

மருத்துவம், தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தணிக்கைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தணிக்கைத் துறையில் ஆவணங்களைச் சரிபாா்த்தல், ரசீதுகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட தொடா்ச்சியான பணிகளை செயற்கை நுண்ணறிவு எளிதாக மேற்கொள்ளும். அதேநேரத்தில், கூடுதல் வசதிகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகளை மனிதா்களே மேற்கொள்வா்.

செயற்கை நுண்ணறிவு வளா்ச்சியைக் கண்டு அச்சப்படாமல், அதைப் பயன்படுத்துவதற்கான அறிவையும் திறனையும் வளா்த்துக்கொண்டால் தொழில்நுட்ப வளா்ச்சியுடன் நாமும் இணைந்து முன்னேற முடியும். எதிா்காலத்தில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்க உள்ளது.

புதியதாக வரும் தொழில்நுட்ப வளா்ச்சியைப் புரிந்துகொண்டு கற்றுக்கொண்டால், அதனுடன் இணைந்து பயணிக்க முடியும். மாற்றம் மாறாதது என்பதால், அனைவரும் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.