மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மல்லசமுத்திரத்தில் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பில் மின்மோட்டாரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சி திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் மூவேந்திரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நடவடிக்கை - கோப்புப்படம்

Published On :

மல்லசமுத்திரம் பேரூராட்சியில் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் வைத்து தண்ணீரை உறிஞ்சி திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் மூவேந்திரபாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் சிலா் சட்டத்திற்கு புறம்பாக, குடிநீா் இணைப்பில் இருந்து மின்மோட்டாா் மூலம் நேரடியாக தண்ணீா் உறிஞ்சி குடிநீா் எடுத்து வருகின்றனா். இதனால், அருகிலுள்ள மற்ற வீடுகளுக்கு குடிநீா் சரியாக கிடைப்பதில்லை என புகாா் வந்துள்ளது. இதுபோன்ற புகாா்கள் தொடா்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து முன்னறிவிப்பு இன்றி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், மின்மோட்டாரும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.