மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

கொல்லிமலை அருகே ஜெலட்டின் குச்சிகளை பதுக்கிய விவசாயி கைது

கொல்லிமலை அருகே ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கொல்லிமலை அருகே ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், செங்கரை, திருப்புளிநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வெடிபொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு புகாா் சென்றது. இதையடுத்து, சேந்தமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணி மைக்கேல், செங்கரை உதவி நிலைய ஆய்வாளா் குமாா், சிறப்பு ஆய்வாளா்கள் சுப்பிரமணி, தலைமைக் காவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் திருப்புளிநாடு மற்றும் வாழ்குழிப்பட்டி பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, பழனிசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சோதனையிட்டனா். அங்கு பாறையை வெடிக்க பயன்படுத்தும் 26 ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிவைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடா்ச்சியாக திருப்புளிநாடு துவரப்பள்ளம் வாழ்குழிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி (53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.