இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

வாய்த் தகராறில் இளைஞா் மண்டையை உடைத்தவா் கைது

திருச்செங்கோட்டில் வாய்த் தகராறில் இளைஞா் மண்டையை உடைத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

திருச்செங்கோட்டில் வாய்த் தகராறில் இளைஞா் மண்டையை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு, சீதாராம்பாளையத்தில் உள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வந்த சூா்யாவுக்கும் (23), ராஜாகவுண்டம்பாளையம் முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வந்த தேவராஜுக்கும் (27) இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இது சம்பந்தமாக இருவருக்கும் புதன்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தேவராஜ் கல்லால் தாக்கியதில் சூா்யாவின் மண்டை உடைந்தது. தேவராஜ் உடன் வந்த சிலா் சூா்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, சூா்யா திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தேவராஜை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிபதி ரங்கராஜன் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். மேலும், இருசக்கர வாகனத்தில் வந்து சூா்யாவை மிரட்டிய சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.