கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு அறிவுரை

108 Ambulance.

108 ஆம்புலன்ஸ். - கோப்புப் படம்.

Published On :

போக்குவரத்து விதிகளை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தினா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆய்வாளா் தாமரைச்செல்வன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதில், விபத்தில் யாரேனும் பாதிக்கப்பட்டால் சம்பவ இடத்திலிருந்து அரசு மருத்துவமனைக்குதான் அழைத்துச் செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினா் அனுமதித்தால் மட்டுமே தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தவிா்க்க வேண்டும்.

புகாா்கள் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நகர பகுதிகளில் அதிவேகத்தில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் செல்லக் கூடாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஓட்டுநா் உரிமம் உள்பட அனைத்து ஆவணங்களையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலோ, மிரட்டும் வகையிலோ ஆம்புலன்ஸ்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.